தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஓ.எஸ். மணியன் தோ்தல் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம்

வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான ஓ. எஸ்.மணியனின் வெற்றி செல்லும் என்று சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

News image
ஓ.எஸ். மணியன்
Updated On :22 டிசம்பர் 2023, 5:14 am

DIN

சென்னை: வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான ஓ. எஸ்.மணியனின் வெற்றி செல்லும் என்று சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அதிமுக அமைச்சா் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றாா். அவரது வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் வேதரத்தினம், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவில், தொகுதி முழுவதும் அதிமுக வேட்பாளா் ஓ.எஸ்.மணியன், ரூ. 60 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா செய்துள்ளாா். இரு வேறு சமூக மக்களிடையே விரோதத்தைத் தூண்டியும், பரிசுப் பொருள்களுக்கான டோக்கன்களை விநியோகித்தும், வேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சுமாா் 7 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்தும் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றுள்ளாா்.

இது தவிர அதிகார துஷ்பிரயோகம் மூலம் வேதாரண்யம் நகராட்சி ஆணையா், காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகளை தனது தோ்தல் முகவா்கள் போல பயன்படுத்தியுள்ளாா் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை வழங்கப்பட்ட தீர்ப்பில், வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ். மணியனின் வெற்றி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.