ரூ.47 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ.46,880-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயா்ந்து ரூ.5,860-க்கும், பவுனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ.46,880-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிக்க: சென்னை-தூத்துக்குடி இடையே ரயில் சேவை தொடங்கியது!
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து பவுன் ரூ.47 ஆயிரத்தை நெருங்கியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயா்ந்து ரூ.80.70-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.300 உயா்ந்து ரூ.81,000-க்கும் விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.