தூத்துக்குடி சுங்கச்சாவடிகளில் டிச.31-ஆம் தேதி வரை வாகனங்களுக்கு கட்டணம் விலக்கு!

அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் டிச.31-ஆம் தேதி வரை வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு
தூத்துக்குடி சுங்கச்சாவடிகளில் டிச.31-ஆம் தேதி வரை வாகனங்களுக்கு கட்டணம் விலக்கு!


தூத்துக்குடி: அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் டிச.31-ஆம் தேதி வரை வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.

அதி கனமழையால் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாவட்டத்திற்கு தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள் நிவாரண பொருள்கள் வழங்கி வருகின்றனர். 

இந்தநிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண பொருள்களை வாகனங்களில் சிரமமின்றி கொண்டு செல்வதற்காக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு டிச.31 -ஆம் தேதி வரை அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்துவதிலிருந்து கட்டண விலக்கு அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com