திட்டம் இரண்டு திரைப்பட பாணி காதல்! தோழியைக் கொன்ற திருநம்பி! 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திட்டம் இரண்டு திரைப்படத்தைப் போல ஒரு காதலும் தொடர்ச்சியாக ஒரு படுகொலையும் நடந்திருக்கிறது சென்னையில்!
திட்டம் இரண்டு திரைப்பட பாணி காதல்! தோழியைக் கொன்ற திருநம்பி! 
Published on
Updated on
2 min read

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திட்டம் இரண்டு திரைப்படத்தைப் போல ஒரு காதலும் தொடர்ச்சியாக ஒரு படுகொலையும் நடந்திருக்கிறது சென்னையில்!

திட்டம் இரண்டு திரைப்படத்தில் ஆதிரா (ஐஸ்வர்யா ராஜேஷ்)வுக்கு  பேருந்து பயணத்தில் அர்ஜுனின் (சுபாஷ்) நட்பு கிடைக்கிறது. பின்னர் அது காதலாக மலர்கிறது.

படத்தின் ட்விஸ்ட் என்னவென்றால் அந்தக் காதலன் ஐஸ்வர்யா ராஜேஷ் பள்ளியில் படித்த தனது நெருங்கிய தோழி. சிறுவயதிலிருந்தே ஐஸ்வர்யா ராஜேஷை காதலித்த தோழி அவரை திருமணம் செய்ய திருநம்பியாக மாறியிருப்பார். 

இதேபோல் நிஜத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது... 

சென்னை புறநகர் நாவலூரில் நந்தினி என்ற ஒரு ஐடி பெண்ணை காதலன் ஒருவன் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எரித்து கொன்ற வெற்றிமாறன் என்பவர் ஆணாக மாறிய ஒரு பெண் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தப் பெண் யாரென்றால் இறந்த பெண்ணின் பள்ளிக்கால சிநேகிதி. பெயர் பாண்டி முருகேஸ்வரி. 

நந்தினி
நந்தினி

மதுரையில் ஒரே பள்ளியில் நந்தினியும் முருகேஸ்வரியும் படித்துள்ளார்கள். இவர்களுடன் இன்னொரு பெண்ணுமாக மூவரும் நெருக்கமான தோழிகளாக இருந்துள்ளார்கள். 12ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளார்கள். பின்னர் மூவரும் வெவ்வேறு கல்லூரிகளுக்கு சென்றுள்ளார்கள். கல்லூரியிதான் முருகேஸ்வரி தனக்கு ஆண் தன்மை இருப்பதாகக் கண்டறிந்துள்ளார். இதனையரிந்த நந்தினியின் குடும்பத்தார் வெற்றிமாறனிடம் பேச வேண்டாமெனவும் கூறியுள்ளார்கள். 

2019இல் ஒருமுறை வெற்றிமாறனை கையை கட்டி வீட்டை விட்டு துரத்தியதாக நந்தினியின் சகோதரி தெரிவித்துள்ளார். பின்னர் வெற்றிமாறன் பெங்களூருவுக்கு சென்று பணம் சம்பாதித்து ஆணாக மாறியுள்ளார். ஆணாக மாறுவது குறித்து அத்தனையும் நந்தினியிடம் கூறிவந்திருக்கிறார். 

நந்தினி ஐடியில் இளங்கலைப் பிரிவில் பட்டம் முடித்து, 8 மாதங்களுக்கு முன்பு சென்னையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.  உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.

கடந்த (டிச.23) சனிக்கிழமைன்று நந்தியின் பிறந்தநாளன்று அழைபேசியில் அழைத்து பிறந்தநாளுக்கு பரிசு தருவதாகவும் தன்னை சந்திக்கும்படியும்  வெற்றிமாறன் கேட்டுக்கொண்டுள்ளார். பின்னர் இருவரும் சந்தித்துள்ளார்கள். நந்தினிக்கு புதிய ஆடைகளை வாங்கியுள்ளார்கள். கோவிலுக்கு சென்றுள்ளார்கள். பின்னர் தாம்பரத்துக்கு அருகிலுள்ள ஆதரவற்றோர் ஆசிரமத்துக்கு சென்று அன்பளிப்பு அளித்துள்ளார்கள். 

பின்னர் நந்தினையை தானே வண்டியில் கூட்டிக்கொண்டு  உறவினர் வீட்டில் விடுவதாக வெற்றிமாறன் கூறியுள்ளார். மாலை 7-7.15 மணிக்கு தாழம்பூரை அடுத்த பொன்மார்-மாம்பாக்கம் செல்லும் சாலையில் வண்டியை நிறுத்தியுள்ளார். காலியான இடத்தில் நந்தினையை புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க சொல்லி கீழே இறக்கி இருக்கிறார்.  பரிசு தருவதாகக் கூறி நந்தினையை கண்களை மூடும்படி கூறியுள்ளார். நந்தினி எதிர்பாரத விதமாக வண்டியில் வைத்திருந்த சங்கிலியை எடுத்து கையிலும் காலிலும் கட்டியுள்ளார்.

நந்தினை எவ்வளவு கெஞ்சிக்கேட்டும் விடாமல் இதை செய்திருக்கிறார். பின்னர் பிளேடல் கழுத்து, கைகளை அறுத்திருக்கிறார். பின்னர் ஒரு பாட்டில் பெட்ரோலை  நந்தினிமீது ஊற்றி தீயிட்டு கொளுத்தியிட்டு தப்பியோடியிருக்கிறார் வெற்றிமாறன்.

அந்த வழியாக வந்த பொதுமக்கள் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். பின்னர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நந்தினி சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு நந்தினி உயிரிழந்தார்.

பின்னர் காவல்துறை விசாரணையில், “சில வருடங்களுக்கு முன்பாக நான் ஆணாக மாறினேன்.  இது நந்தினிக்கு தெரிந்ததும் பிடிக்கவில்லை. நாம் சேர்ந்து வாழ முடியாதென நந்தினி கூறினார். மேலும், சமீபத்தில் வேலை செய்யும் இடத்தில் நந்தினிக்கு வேறு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டது. எவ்வளவு சொல்லியும் நந்தினி கேட்கவில்லை. அதனால் ஆத்திரமடைந்த நான்  நந்தினையை கொலை செய்தேன்” என விசாரணையில் வெற்றிமாறன் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பால்புதுமையினரின் சமூக ஆர்வலர் எல்.ராமகிருஷ்ணன் விசாரனை நேர்மையாகவும் கண்ணியமாகவும் நடத்துபடி காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 

நேர்மையாகவே இந்த வழக்கினை விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.