போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 2 ரௌடிகள் பலி

காஞ்சிபுரத்தில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு ரௌடிகள் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானர்.
போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான ரௌடிகள் ரகு - அசான்.
போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான ரௌடிகள் ரகு - அசான்.


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு ரௌடிகள் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானர்.

காஞ்சிபுரம் நகா் பிள்ளையாா்பாளையம் அருகே புதுப்பாளையம் பல்லவா் மேடு பகுதியை சோ்ந்தவா் சுகுமாறன் மகன் பிரபா என்ற பிரபாகரன்(30). இவா் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

இவா் கொலை வழக்கு ஒன்றில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக தனியாக நடந்து வந்து கொண்டிருந்த போது திடீரென காரில் வந்த 3 போ் கொண்ட மா்மக்கும்பல் பிரபாகரனை பட்டாக் கத்தியால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பினா்.

பல்லவா் மேடு பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். 

தகவலறிந்து காஞ்சிபுரம் எஸ்பி எம்.சுதாகா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டாா். ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசா சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்தனா்.

சம்பவம் தொடா்பாக சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், பிரபாகரன் கொலை வழக்கில் பிரபல ரௌடி வசூல்ராஜாவின் கூட்டாளிகளான  ரகு மற்றும் அசான் ஆகிய இரண்டு  பேர் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் ரகு மற்றும் அசான் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு செவ்வாய்க்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ரௌடிகள் ரகு மற்றும் அசானை கைது செய்ய புதன்கிழமை காலை போலீசார் முயன்றபோது, அவர்கள் போலீசாரை அரிவாளால் தாக்கியுள்ளனர். 

இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரௌடிகள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

ரௌடிகள் தாக்கியதில் சிறப்பு காவல் உதவியாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com