முதல்வருடனான சந்திப்பு சுமுகமாக இருந்தது: ஆளுநர் மாளிகை
முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்பு சுமுகமாக இருந்ததாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.


முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்பு சுமுகமாக இருந்ததாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஆளுநரும், முதல்வரும் மாநிலம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினர். தமிழ்நாடு மக்களின் நலனுக்கான தனது முழு அர்ப்பணிப்பை சந்திப்பின்போது ஆளுநர் வலியுறுத்தினார்.
அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவு என ஆளுநர் உறுதியளித்தார். மாநில நலன்கருதி முதல்வர் அவ்வப்போது சந்திப்பதன் அவசியத்தை ஆளுநர் வலியுறுத்தினார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் இன்று சந்தித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜகண்ணப்பன் முதல்வருடன் சென்றனர். நிலுவையிலுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தினார்.
மசோதாக்கள் ஒப்புதல் தொடர்பாக இருவரும் அமர்ந்து பேசுமாறு உச்சநீதிமன்றம் யோசனை கூறியிருந்தது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலையடுத்து ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...