தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய விஜய்

தூத்துக்குடி, நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

News image
Updated On :30 டிசம்பர் 2023, 8:03 am

DIN

தூத்துக்குடி, நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. 

இதனால் ஏராளமான பொதுமக்கள் வீடுகளை இழந்து மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும், வியாபாரங்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டன. 

நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 1500-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை விஜய் வழங்கினார்.

மேலும், வீடுகளை இழந்த வள்ளி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், இசக்கி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், சங்கரன் என்பவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வீடுகள் சேதம் அடைந்த 30 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்தை வழங்கினார்.

தொடர்ந்து 2,500 பேருக்கு வடை, பாயாசத்துடன் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.

பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில்  சுமார்  1000 பேருக்கு மேல் நிவாரண பொருள்கள் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.