திருவள்ளூர் தீர்த்தீஸ்வர் கோயிலில் மகா குடமுழுக்கு: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

திருவள்ளூர் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ தீர்த்தீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் தீர்த்தீஸ்வர் கோயிலில் மகா குடமுழுக்கு: பக்தர்கள் திரளாக பங்கேற்பு
Published on
Updated on
1 min read

திருவள்ளூர்: திருவள்ளூர் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ தீர்த்தீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான அருள்மிகு திரிபுர சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீதீர்த்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயில் சான்றோர்களை தன்னகத்தை கொண்டு விளங்கும் தொண்டை வள நாட்டில் திருஞானசம்மந்த சுவாமிகளால் பாடல் பெற்ற தலமாகும். 

மேலும் சிவாலயங்களுக்கு நடுநாயகமாக திகழும் வீஷாரண்ய ஷேத்திரம் என்று அழைக்கப்படும் திருவள்ளூரில் உள்ள திருமாலின் வினையை தீர்த்து அருளிய திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ தீர்த்தீஸ்வரர் சுவாமி என்ற நாமத்துடன் திருக்கோவில் கொண்டு பன்னெடுங்காலமாக அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஜீர்னோத்தாரணம் செய்து பல்வேறு வண்ணம் தீட்டி திருப்பணிகள் மேற்கொண்டு நிறைவுபெற்றுள்ளன.

அதன் அடிப்படையில் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி இந்தக் கோயிலில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழா சிவகாம முறைப்படி புதன்கிழமை காலையில் நடைபெற்றது. 


அதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு 6-ஆம் கால யாக பூஜையும், 8.30 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, சண்டேச யாகமும், 9 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்படுதலும் நடைபெற்றது. 

அதைத் தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் புனித நீர் கொண்டு குடமுழுக்கு செய்யப்பட்டன. பின்னர் 10 மணிக்கு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டன. 

இதில் திருவள்ளூர், மணவாளநகர், ஈக்காடு, காக்களூர், பெரியகுப்பம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா ரா.ரவி குருக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com