விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அதிமுக இணைவதற்கான காலம் வந்துவிட்டது: சசிகலா பேட்டி

அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருவந்துவிட்டதாக வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

News image

சசிகலா (கோப்புப் படம்)

Updated On :3 பிப்ரவரி 2023, 9:04 am


அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருவந்துவிட்டதாக வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

அறிஞர் அண்ணாவின் 54ஆம் ஆண்டு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருகிறது. அதிமுகவை முழுமையாக புரிந்து கொண்டால் பாஜகவை தேடிச் செல்லும் தவறுகள் நடக்காது. 

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். 

தனித்தனியாக இருந்து செயல்படுவதை தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி பெற முடியும். தனித்தனியாக இருந்தால் அது அதிமுகவுக்கு நல்லதல்ல எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.