
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெண்களுக்கு ஆரத்தி எடுத்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோடு கிழக்கு நிர்வாகிகளுடன் வார்டு 25 முழுவதும் வீடுகள் தோறும் சென்று திண்ணை பிரச்சாரத்தின் மூலம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது, அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிக்க: தைப்பூசம் : திருச்செந்தூரில் லட்சக்கணக்கானோர் தரிசனம்
ஈரோடு கிழக்கில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் அமைச்சருக்கு ஆரத்தி எடுக்க வந்தனர். ஆனால், அவர்களை எடுக்க விடாமல் அவரே அந்த பெண்களுக்கு ஆரத்தி எடுத்து, அங்குள்ள பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.