நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

தண்டவாள பராமரிப்புப் பணி:  4 முக்கிய ரயில்கள் ரத்து

சேலம் மேக்னசைட் அருகே தண்டவாள பராமரிப்புப் பணி நடைப்பெறுவதால் காரைக்கால் எக்ஸ்பிரஸ் உள்பட 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :5 பிப்ரவரி 2023, 8:47 am IST

சேலம் மேக்னசைட் அருகே தண்டவாள பராமரிப்புப் பணி நடைப்பெறுவதால் காரைக்கால் எக்ஸ்பிரஸ் உள்பட 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மேக்னசைட்  ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால், இந்த வழியே இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் ரயில்வே நிர்வாகம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி, ஈரோடு-மேட்டூர் அணை எக்ஸ்பிரஸ் (06407), மறு மார்க்கத்தில் மேட்டூர் அணை-ஈரோடு எக்ஸ்பிரஸ் (06408) ஆகியவை வரும் 5, 6, 8ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 

இதேபோல், பெங்களூரு-காரைக்கால் எக்ஸ்பிரஸ் (16529), மறு மார்க்கத்தில் இயங்கும் காரைக்கால்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் (16530) ஆகியவை வரும் 11ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம் - யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் (16212) வரும் 5,6,8 ஆம் தேதிகளில் ஒரு பகுதியாக சேலம்-ஓமலூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில், ஓமலூரில் இருந்து புறப்பட்டு யஸ்வந்த்பூர் செல்கிறது. கோவை-லோக் மான்யதிலக் எக்ஸ்பிரஸ் மான்யதிலக் எக்ஸ்பிரஸ் (11014) வரும் 11 ஆம் தேதி சேலத்தில் இருந்து  தர்மபுரி, ஓசூருக்கு பதிலாக மாற்றுப்பாதையாக திருப்பத்தூர், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு வழியே இயக்கப்ப டுகிறது.

இதேபோல், பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (12677) வரும் 11 ஆம் தேதி ஓசூர், தர்மபுரி வழித்தடத்திற்குப் பதிலாக கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர், சேலம் வழியே இயக்கப்படுகிறது.

ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352) வரும் 11 ஆம் தேதி, ஆலப்புழாவில் காலை 6 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 1.30 மணி நேரம் தாமதமாக காலை 7.30 மணிக்கு புறப்படுகிறது.

எர்ணாகுளம்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12678) வரும் 1 ஆம் தேதி, எர்ணாகுளத்தில் காலை 9.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாக காலை 10.10 மணிக்கு புறப்படுகிறது. இத்தகவலை தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரி வித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.