பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

செங்கல்பட்டில் சமூக நலத்துறையின் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் சமூக நலத்துறை சார்பில் புதிய கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 

News image
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் சமூக நலத்துறை சார்பில் புதிய கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 
Updated On :6 பிப்ரவரி 2023, 7:52 am

DIN

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.42.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அரசினர் பாதுகாப்பு இல்ல புதிய கட்டடம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையக் கட்டடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (6.2.2023) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் ரூ.15.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அரசினர் பாதுகாப்பு இல்ல புதிய கட்டடம் மற்றும் ரூ.27.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையக் கட்டடம் ஆகிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் சமூகப் பாதுகாப்புத் துறை மாநிலத்தில் குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான திட்டத்தை செயல்படுத்த பல்வேறு வகையான குழந்தை பராமரிப்பு நிறுவனங்களை நிறுவி பராமரித்து வருகிறது. சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும்/முரணாக செயல்பட்ட சிறார்களை தங்கவைத்து பராமரிப்பு மற்றும் மறுசீராக்க பயிற்சிகளை அளிப்பதற்காக செயல்படும் அரசினர் பாதுகாப்பு இல்லத்திற்கு செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் ரூ.15.95 கோடி மதிப்பீட்டில் 37,146 சதுர அடி பரப்பளவில் 100 சிறார்கள்/இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு புதிய கட்டடம் கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 80,326.36 சதுர அடி பரப்பளவில் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையம் கட்டுவதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இப்பயிற்சி மையத்தில் மாவட்ட சமூக நல அலுவலர்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் அங்கன்வாடிப் பணியாளர்கள், காவல் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசுப் பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் சமூகப் பணியாளர்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளி/கல்லூரி
மாணவ-மாணவியர்கள், குழந்தைகள், மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள் நலனுக்காக செயல்படும் அனைத்து தரப்பினருக்கும், குழந்தைகள் மற்றும் மகளிர் நலன், உரிமைகள், மேம்பாடு, அதிகார பரவலாக்கம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.