
ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாஜக ஆதரவு அளிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு பாஜக தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் தென்னரசு வெற்றிக்காக பாடுபட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளரை நிறுத்தியுள்ள பழனிசாமிக்கு நன்றி. கூட்டணியின் நலன் கருதி வேட்பாளரை திரும்ப பெற்ற பன்னீர் செல்வத்துக்கு நன்றி.
இதையும் படிக்க: தொடரும் அமளி: மாநிலங்களவை பிற்பகல் 2 வரை ஒத்திவைப்பு!
தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளராக களம்காணும் தென்னரசுக்கு வாழ்த்துகள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.