6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணப்பாறை: என்.பூலாம்பட்டியில் களைகட்டிய ஜல்லிக்கட்டு!

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் என்.பூலாம்பட்டியில் அந்தோணியார் பொங்கல் விழாவினை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :11 பிப்ரவரி 2023, 9:26 am

DIN

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் என்.பூலாம்பட்டியில் அந்தோணியார் பொங்கல் விழாவினை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியினை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வராஜ், டி.எஸ்.பி ராமநாதன் ஆகியோர் தொடக்கி வைத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் N.பூலாம்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கல் விழாவினை முன்னிட்டு தேவாலய திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 600-க்கு மேற்பட்ட காளைகளும், 300-க்கு மேற்பட்ட காளையர்களும் களம் காணுகின்றனர். போட்டியினை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்துள்ளனர்.

பங்குதந்தை அ.ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர் சிறப்பு பிராத்தனைக்கு பின் வாடிவாசல் வழியே கோயில் மற்றும் உள்ளூர் காளைகள அவிழ்க்கப்பட்டதையடுத்து, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைக்கப்பட்டிருந்த காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே அவிழ்க்கபட்டு வருகிறது. வாடிவாசல் வழியே சீறிபாய்ந்த காளைகளை காளையர்கள் திமில் தழுவி வருகின்றனர்.

Story image

இதில் மாட்டினை பிடித்து தழுவி வெற்றிக்கண்ட வீரர்களுக்கும், காளையர்கள் கைகளில் சிக்காமல் சீறிபாய்ந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கம், சில்வர் பாத்திரங்கள், வெள்ளிக்காசு, கட்டில், எல்.இ.டி டிவி, சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. போட்டியினை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டுள்ளனர். நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.