செங்கோட்டையன்(கோப்புப்படம்)
செங்கோட்டையன்(கோப்புப்படம்)

திமுக கூட்டணிக் கட்சிகள் தேர்தல் விதிமீறல்: செங்கோட்டையன்

திமுக கூட்டணிக் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகார் அளித்துள்ளார்.
Published on

திமுக கூட்டணிக் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக கூட்டணி சார்பில் கே.எஸ். தென்னரசுவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரசாரம் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக கூறி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் செங்கோட்டையன் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோட்டில் பல இடங்களில் அனுமதி பெறாமலேயே திமுக கூட்டணிக் கட்சிகள் கூடாரங்கள் அமைத்துள்ளனர். விதிமுறைகளுக்கு எதிராக நடக்கின்ற செயல்களை தடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com