தொடர் ஏடிஎம் கொள்ளைகளில் ஈடுபட்டது ஒரே கும்பல்தான்: காவல் துறை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 இடங்களில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது ஒரே கும்பல்தான் என்றும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தமிழக காவல்துறையினர் இன்று தெரிவித்தனர்.


சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 இடங்களில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது ஒரே கும்பல்தான் என்றும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தமிழக காவல்துறையினர் இன்று தெரிவித்தனர்.
இதுகுறித்து வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் என்.கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருவதாகவும், பல தடயங்கள் தற்போது கிடைத்துள்ள நிலையில் வழக்கு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
திருவண்ணாமலையின் 3 நகரங்களில் உள்ள 4 ஏடிஎம் மையங்களிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.72.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கொள்ளையடித்தவர்கள் ஏடிஎம் இயந்திரங்களை மின்சார வெல்டிங் மூலம் வெட்டியெடுத்து பணத்தை கொள்ளையடித்த பின் இயந்திரத்துக்கு தீ வைத்துள்ளனர்.
ஏடிஎம்கள் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டறிந்த ரோந்து காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...