தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வேலூரில் தனியார் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை!

குடியாத்தம் பகுதியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :14 பிப்ரவரி 2023, 7:31 am

DIN

குடியாத்தம் பகுதியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தனியார் குழுமத்துக்கு சொந்தமான கடை, வீடு, அலுவலகம் ஆகிய பகுதிகளிலும், வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையிலும், வேலூர் ஓல்ட் பைபாஸ் சாலையில் உள்ள அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை மற்றும் தில்லியை சேர்ந்த மூன்றுக்கும் மேற்பட்ட குழுவினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரி எய்ப்பு செய்ததாக புகாரின்பேரில் நடைபெற்று வரும் இந்த சோதனையில் தனியார் குழுமத்தில் உள்ள ரியல் எஸ்டேட் குறித்த ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் இதர தொழில்கள் குறித்த ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.