இடைநிலை ஆசிரியர் கோரிக்கை: ஆய்வு செய்யக் குழு அமைத்து அரசாணை

இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைத்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைத்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித் துறை செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள், தங்களது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com