திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்!

திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்!

திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பதியான ஸர்வேஸ்வரன் தானுகந்து ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்டு எழுந்தருளியிருக்கும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாயும், ஸ்ரீ இளையாழ்வார் என்கிற எம்பெருமானார் யாதவப் பிரகாசரிடம் வித்தியார்த்தியாய் எழுந்தருளி இருந்த ஸ்தலமாயும், பெரிய உடையார் என்னும் ஜடாயுவை நமஸ்கரித்ததுபோல் சேவை சாதிக்கும் தலமாயும், பின்பழகராம் பெருமாள் ஜீயர், திருப்புட்குழி ஜீயர் முதலிய மகான்கள் அவதரித்த தலமாயும், ஸ்ரீவேதாந்தாச்சார்யர் ஸ்ரீமணவாள மாமுனிகளால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலமாயும் உள்ள திருப்புட்குழியில் ஸ்ரீமரகதவல்லித் தாயாரை இடம் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விஜயராகவப் பெருமாளுக்கு பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

நாளது சுபகிருது வருஷம் மாசி மாதம் 3-ம் தேதி  இன்று புதன்கிழமை முதல் மாசி மாதம் 12-ம் ஆம் தேதி (24-02-2023) வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது.

இன்று காலை விஜயராகப் பெருமாள்,  ஸ்ரீதேவி நாச்சியார் பூமாதேவி நாச்சியாருடன் கொடிமரம் அருகே எழுந்தருள காலை 9 மணி முதல் 10 மணிக்குள் மீன் லக்கினத்தில் பிரமோற்சவ  கொடி என அழைக்கப்படும் த்வஜாரோஹணம் நடைபெற்றது.

இன்று மாலை  ஹம்ச வாகனமும் ,  வெள்ளிக்கிழமை கருட சேவை நிகழ்ச்சியும், சனிக்கிழமை சேஷ வாகனமும் ஞாயிற்றுக்கிழமை நாச்சியார் திருக்கோளமும், திங்கள்கிழமை 23ஆம் தேதி பல்லக்கு தீர்த்தவாரி என காலை உற்சவங்களும் ,  பிப்ரவரி 21 ஆம் தேதி காலை 8 மணி முதல் 9 மணி வரை திருத்தேர் உற்சவம் சிறப்புடன் நடைபெற உள்ளது.

நாள்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எம்பெருமான் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. பிப்.24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 

பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி அறிவுரையின் பேரில் செயல் அலுவலர் தியாகராஜன்,  ஆய்வாளர் பிரித்திகா மற்றும் திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் உற்சவர் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள  திருப்புட்குழி என பெயர் பெற்ற திருத்தலம் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com