தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க மேலும் அவகாசம்!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2023, 12:21 pm

DIN


மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். அதன்படி வரும் 28ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கலாம்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்னும் 7 லட்சம் பேர் மின் இணைப்பை ஆதாருடன் இணைக்காமல் உள்ளனர். இதனால், இன்றுடன் நிறைவடைய இருந்த அவகாசம், பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இதுவரை 2.60 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு போன்ற பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்பட்டதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். 

மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பா் 15-ஆம் தேதி தொடங்கியது. டிசம்பா் 31-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த இணைப்புப் பணிக்காக, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டா்கள் அமைக்கப்பட்டன. மின்நுகா்வோரின் வசதிக்காக, ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகும், புதன்கிழமை (பிப். 15)-ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.