குடியரசுத் தலைவர் வருகை: மதுரையில் 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

குடியரசுத் தலைவர் வருகை திரௌபதி முர்மு வருகையையொட்டி, மதுரையில் 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் வருகை திரௌபதி முர்மு வருகையையொட்டி, மதுரையில் 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிப்ரவரி 18-ஆம் தேதி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல் முறையாக தமிழகம் வருகிறார்.  பிப்ரவரி 18-ம் தேதி தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் காலை 11.50 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும் முர்மு, மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். 

பின்னர், ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 19-ம் தேதி கோவையிலிருந்து மீண்டும் புறப்பட்டு முர்மு தில்லி செல்கிறார்.

இந்த நிலையில், மதுரையில் பிப்.18, 19-ல் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com