ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து விஜயபிரபாகரன் முரசு கொட்டி வாக்குச் சேகரித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாள்களாக கட்சியினருடன் சேர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் புதன்கிழமை காலை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட அன்னை சத்யா நகர், சிந்தன் நகர்,16 சாலை, வைராபாளையம் ஆகிய பகுதிகளில் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வாக்குச் சேகரித்தார்.
அப்போது, பெண்கள் அவரை சூழ்ந்து கொண்டு நீங்கள் பார்ப்பதற்கு விஜயகாந்த் மாதிரி உள்ளீர்கள் என்று கூறி விஜய பிரபாகரனுடன் சுயபடம் எடுத்துக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து விஜயபிரபாகரன் தனது கட்சியின் முரசு சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் முரசு கொட்டி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதைத்தொடர்ந்து விஜய பிரபாகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மக்கள் மத்தியில் விஜயகாந்துக்கும், எங்களது கட்சி வேட்பாளருக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. முரசு சத்தம் கேட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். அதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
தேமுதிக.கடந்த 2006 ஆம் ஆண்டு அதிமுக, திமுக கட்சிகளை எதிர்த்துதான் போட்டியிட்டது. நடுவில்தான் கூட்டணி அமைத்தது. ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற வியூகம் அமைத்து வருகிறோம். எங்கள் பலத்தை நிரூபிக்கும் தேர்தலாக இது இருக்கும்.
எல்லா தேர்தலிலும் பணம் புழக்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் காலங்கள் இருக்கிறது. இப்போதைக்கு எங்கள் கவனம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் மட்டுமே உள்ளது. கூட்டணி குறித்து எங்கள் கட்சியின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா உரிய நேரத்தில் அறிவிப்பார்கள் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக சந்தீப் மித்தல் நியமனம்!

சுக்ரன்! பெண் கொடுமைகளுக்கு எதிராக வாதாடும் மாஸ் வழக்கறிஞராக விஜய்!

வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

முதல்வர்களின் படங்களை வைப்பதில் போட்டி! பாதியில் முடிந்த காஞ்சிபுரம் மாமன்றக் கூட்டம்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



