குரூப் 2, 2ஏ பிரதான தோ்வு: நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கலாம்
குரூப் 2, 2ஏ பிரதான தோ்வுக்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.


குரூப் 2, 2ஏ பிரதான தோ்வுக்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குரூப் 2 மற்றும் 2ஏ பிரதானத் தோ்வு பிப்.25-ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ளது. தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை தோ்வாணைய இணையதளங்களில் (www.tnpscexams.in, www.tnpsc.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரா்கள் தங்களுடைய விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...