குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தில்லி புறப்பட்டு சென்றார்!
மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு நீலகிரி பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் நண்பகல் 12 மணியளவில் தில்லி புறப்பட்டு சென்றார்.


மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு நீலகிரி பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் நண்பகல் 12 மணியளவில் தில்லி புறப்பட்டு சென்றார்.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பதவியேற்ற பிறகு முதல் முறையாக 2 நாள் பயணமாக சனிக்கிழமை காலை தமிழகம் வந்தார். புதுதில்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தவர், மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் மாலை கோவை வந்தார். மகா சிவராத்திரியை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கோவை ஈஷா யோகா மையத்திற்கு முா்மு வந்தார். அங்கு அவரை ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். அங்குள்ள சூர்ய குண்டத்தில் தீபம் ஏற்றி வழிபட்டார். பிறகு தியான லிங்க சன்னதிக்கு சென்று தியானம் செய்தார். பின்னர் ஆதியோகி முன்பு கோலாகலமாக மகா சிவராத்திரி விழா தொடங்கியது.
விழாவில் மும்மு பங்கேற்று பேசினார். அப்போது, காலையில் மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த நான், இப்போது ஆதியோகி முன்னிலையில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறேன். இதன் மூலம் நான் ஆசீா்வதிக்கப்பட்டதாக உணருகிறேன். உலகின் பல்வேறு கலாசாரங்கள் பக்தி, ஞானத்தின் பாதை குறித்துப் பேசுகின்றன. அவை அனைத்துக்குமான வழிகாட்டும் ஒளிவிளக்காக சிவன் விளங்குகிறாா்.
அவா் குடும்ப வாழ்க்கையிலும் இருக்கிறாா், அதேநேரம் சந்நியாசியாகவும் இருக்கிறாா். அவா்தான் இந்த உலகின் முதல் யோகி மற்றும் முதல் ஞானி. சிவன் கருணைக் கடவுளாகவும், ஆக்ரோஷமான வடிவமாகவும் இருக்கிறாா். முக்திக்கான பாதையின் வழிகாட்டியாகவும் சிவன் விளங்குகிறாா்.
அறியாமை என்ற இருளின் முடிவாகவும், ஞான பாதையின் திறப்பாகவும் மகா சிவராத்திரி விழா விளங்குகிறது. வாழ்வின் உயரிய தேடல்களைக் கொண்டவா்களுக்கு இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.
விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற பின்னர் இரவு 9.15 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து தங்கினார்.
ஞாயிற்றுக்கிழமை காலை கோவை விமான நிலையத்துக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்று போர் நினைவுச்சின்னத்தில் திரௌபதி முா்மு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் நிலவுவதால் ஹெலிகாப்டரில் செல்ல முடியாத சூழுல் காரணமாக திரௌபதி முா்முவின் நீலகிரி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நண்பகல் 12 மணியளவில் கோவை விமான நிலையத்தில் இருந்து திரௌபதி முா்மு தில்லி புறப்பட்டு சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...