புதிய நெல் சேமிப்புக் கிடங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

திருவாரூரில் புதிதாக அமைக்கப்பட்ட நெல் சேமிப்புக் கிடங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 
புதிய நெல் சேமிப்புக் கிடங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

திருவாரூரில் புதிதாக அமைக்கப்பட்ட நெல் சேமிப்புக் கிடங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 
காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் அருங்காட்சியகத்தையும் அவர் பார்வையிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தார். 
மாவட்ட எல்லையான கோவில்வெண்ணியில் மாவட்ட திமுக சார்பில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அம்மையப்பன் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மாணவ, மாணவிகளிடம் காரிலிருந்தபடியே நலம் விசாரித்தார். 
சேமிப்புக் கிடங்கில் ஆய்வு... தஞ்சை சாலையில் கட்டப்பட்டுவரும் சேமிப்புக் கிடங்கு பணிகளையும் பார்வையிட்ட முதல்வர், திருவாரூர் கமலாலயக் குளத்தின் வடக்குக் கரையிலிருந்து படகின் மூலம் குளத்தின் நடுவில் உள்ள நடுக்குள நாகநாத சுவாமி கோயிலுக்குச் சென்று 
திரும்பினார். 
சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், மக்களவை திமுக உறுப்பினர் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அருங்காட்சியகத்தில் ஆய்வு... மாலையில், காட்டூருக்குச் சென்ற முதல்வர் அங்கு, கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 
பின்னர், அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, அங்கிருந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு மீண்டும் திருவாரூருக்குத் திரும்பினார்.
முன்னதாக, பிற்பகல் 3 மணியளவில் சந்நிதி தெருவுக்கு வந்த முதல்வர், அங்கு காத்திருந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, அங்குள்ள வீட்டில் ஓய்வெடுத்தார்.
முதல்வர் வருகையையொட்டி, மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் க. கார்த்திகேயன் தலைமையில், தஞ்சை சரக துணைத் தலைவர் ஜெயச்சந்திரன், திருவாரூர், நாகை, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com