சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

தூத்துக்குடியில் வழக்குரைஞர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் வழக்குரைஞர் ஒருவர் மர்ம நபர்களால் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2023, 7:19 pm IST

தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் வழக்குரைஞர் ஒருவர் மர்ம நபர்களால் புதன்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரம் பகுதியைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு மகன் முத்துக்குமார் (43). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நகை கடன் வழங்கும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், இவர் புதன்கிழமை மதியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனது நிதி நிறுவனத்தில் இருந்தாராம். அப்போது, அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள், முத்துக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

Story image

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று முத்துக்குமார் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், டிஎஸ்பி சத்யராஜ் ஆகியோர் நேரில் வந்த ஆய்வு செய்தனர்.

மேலும், தற்போது கொலை செய்யப்பட்ட முத்துக்குமாரின் சகோதரர் சிவக்குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தூத்துக்குடி நீதிமன்றத்தின் அருகே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முத்துக்குமார் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

எனவே, இதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், இது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.