திருவள்ளூர்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை
திருவள்ளூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், திருமணிகுப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட வசனம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் தம்பதி கலையரசன்(37) மற்றும் நித்யா(30). இவர்களுக்கு ஒரு மகன் யாமநாத்(4) இருக்கிறார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவில் தம்பதியர், மகன் ஆகியோர் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக கிராம மக்கள் புதன்கிழமை காலையில் பார்த்துவிட்டு மப்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சடலங்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மப்பேடு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், மகனுக்கு விஷம் கொடுத்து உயிரிழந்த பின்னரே, தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும், தற்கொலைக்கு காரணம் குறித்து சுற்றியுள்ள குடியிருப்புகளைச் சேர்ந்தவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...