குடியரசு துணைத் தலைவர் தமிழ்நாட்டுக்கு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார்.
அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், இதர துறை சார்ந்த அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.