/

தமிழகத்தில் 4 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.3) முதல் வெள்ளிக்கிழமை (ஜன.6) வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:52 pm

DIN

கிழக்கு திசை மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.3) முதல் வெள்ளிக்கிழமை (ஜன.6) வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக திங்கள் கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிழக்கு திசை மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.3) முதல் வெள்ளிக்கிழமை (ஜன.6) வரை மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் வட வானிலை நிலவக்கூடும். வடதமிழக மாவட்டங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் .

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.