
நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் காவல்துறையினரிடம் சரணடைந்தார்.
நாமக்கல் அருகே தூசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(35). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரமிளா(32). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், வீட்டிலிருந்த அரிவாளால் மனைவியை ராஜா வெட்டிக் கொலை செய்தார்.
இதனைத் தொடர்ந்து வீட்டை பூட்டி விட்டு, அரிவாளுடன் சென்ற அவர், நாமக்கல் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆய்வாளர் சங்கரபாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.