திருப்பதி வைகுண்ட ஏகாதசி உற்சவத்துக்கு சேலத்திலிருந்து 5 டன் பூக்கள்!

திருமலை திருப்பதியில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்காக சேலத்தில் இருந்து 5 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பதி வைகுண்ட ஏகாதசி உற்சவத்துக்கு சேலத்திலிருந்து 5 டன் பூக்கள்!
Published on
Updated on
1 min read

திருமலை திருப்பதியில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்காக சேலத்தில் இருந்து 5 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

திருமலை திருப்பதியில் நடைபெறும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளுக்கும் சேலத்தில் இருந்து  மனமுள்ள மலர்கள் மாலையாக தொடுக்கப்பட்டு அனுப்பப்படுவது வழக்கம்

இதன் அடிப்படையில் சேலம் பக்திசாரர் பக்த சபா சார்பில் திருமலை திருப்பதிக்கு வைகுண்ட ஏகாதசி யொட்டி பூக்கள் அனுப்பும் நிகழ்ச்சி சேலம் பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

இதற்காக ஏராளமானோர் மனமுள்ள மலர்களை வழங்கினர். இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மண்டபத்தில் நீண்ட வரிசையில் அமர்ந்து மனமுள்ள மலர்களை மாலையாக தொடுத்தனர்

இதில் சாமந்தி, சம்பங்கி, அரளி, ரோஜா, செண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு மணமுள்ள மலர்கள் மாலையாக தொடுக்கப்பட்டது. இதற்காக சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

திருமலை திருப்பதிக்கு தொடுக்கப்படும் மாலைகள் தங்கள் கைகளால் மாலையா கட்டப்படுவது மிகுந்த மனமகிழ்ச்சி அளிப்பதாகவும், தாங்கள் கொடுக்கும் மாலை சுவாமிக்கு அலங்காரம் செய்யும் பாக்கியம் தங்களுக்கு கிடைத்தது போல எண்ணுவதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

சுமார் 500 டன் மனமுள்ள மலர்கள் இன்று திருமலை திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தவிர வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்களும், காய்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சேலம் பக்தி சாரர் பக்த சபா இயக்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com