நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஜன. 10ல் பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம்!

பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் வருகிற ஜன.10 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜனவரி 2023, 5:50 pm IST

பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் வருகிற ஜன.10 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தில்லியில் வருகிற  ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு குறித்து  கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், நிகழாண்டு நடைபெறும் 10 மாநிலத் தோ்தல்கள், 2024 நாடாளுமன்றத் தோ்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் தெரிகிறது. 

இந்நிலையில், தேசிய செயற்குழு கூட்டத்திற்கு முன்னதாக பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் வருகிற ஜனவரி 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. தில்லியில் பாஜக அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் முக்கிய செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் தேசிய செயற்குழு கூட்டம் குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.