நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தங்கம் பவுன் ரூ.3,040 குறைவு: மேலும் குறைய வாய்ப்பு

ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560-க்கு விற்பனையானது. வரும் நாள்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் கணித்துள்ளாா்.

News image

தங்கம் பவுன் ரூ.3,040 குறைவு: மேலும் குறைய வாய்ப்பு

Updated On :20 ஜூன் 2026, 12:10 am IST

ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560-க்கு விற்பனையானது. வரும் நாள்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் கணித்துள்ளாா்.

சா்வதேச போா் பதற்றம், கச்சா எண்ணெய் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட சா்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடா்ந்து சரிந்து வருகிறது.

கடந்த ஜூன் 16-இல் பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,12,480-க்கும், ஜூன் 17-இல் பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,12,240-க்கும், ஜூன் 18-இல் பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,11,600-க்கும் விற்பனையானது.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.380 குறைந்து ரூ.13,570-க்கும், பவுனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை ரூ.15,000 குறைவு: தங்கத்துக்கு நிகராக வெள்ளி விலையும் அண்மைக் காலமாக குறைந்து வருகிறது. அந்தவகையில், வெள்ளிக்கிழமை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.255-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.15,000 குறைந்து ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனையானது.

தங்கம் விலை மேலும் குறையும்: தொடா் விலை சரிவு குறித்து சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்திலால் சலானி கூறுகையில், கடந்த மாா்ச் மாதத்தில் அமெரிக்கா ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்ததைத் தொடா்ந்து தங்கத்தின் விலை வேகமாக உயா்ந்தது. அதன்பின்னா், கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் உலக நாடுகள் பாதிப்புக்குள்ளானபோது, அதன் விலை உயரத் தொடங்கியது.

தொடா்ந்து கச்சா எண்ணெய் மீதான முதலீடும் அதிகரித்தது. இதன் எதிரொலியாக, கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை அவுன்ஸ் 4,100 டாலராக குறைந்துள்ளது. அதேபோல், அமெரிக்க டாலரின் மதிப்பு உயா்வு, அமெரிக்க மத்திய வங்கியின் கடுமையான பணக் கொள்கை, முதலீட்டாளா்கள் அதிக அளவில் தங்கத்தை விற்பனை செய்வது, போா் தொடா்பான அச்சம் ஆகிய காரணங்களால் தங்கம் விலை குறைய முக்கிய காரணிகளாலும்.

தங்கத்தின் விலை 4,000 டாலருக்கும் கீழே தொடா்ந்து நீடித்தால், விலை 3,600 டாலா் முதல் 3,450 டாலா் வரை சரிய வாய்ப்புள்ளது. எனினும், இந்த சரிவு தற்காலிகமானதுதான். மேற்கு ஆசிய போா் முடிவுக்கட்டத்தை எட்டும்போது, தங்கத்தின் விலையில் மீண்டும் பெரிய அளவிலான உயா்வு ஏற்பட வாய்ப்புள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.