பயிர் இழப்பீடு: சீர்காழியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பயிர் இழப்பீடு: சீர்காழியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
பயிர் இழப்பீடு: சீர்காழியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

சீர்காழி: ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த  நவம்பர் மாதம் 11ம் தேதி ஒரே நாளில் 44 செ.மீ பெய்த கனமழையின் காரணமாக சீர்காழி தாலுகாவில் பயிரிடப்பட்ட சுமார் 30 ஆயிரம் ஹெக்டர் சம்பா பயிர்கள் முற்றிலும் மழையால் பாதிக்கப்பட்டது.

இதையும் படிக்க | ஷ்ரத்தா கொலையை நிரூபித்த ஒரு துண்டு எலும்பும் தலைமுடியும்

பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் , பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும், உயிர் இழந்த கால்நடைகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில்,  திமுக அரசு ஹெக்டேர் ஒன்றுக்கு  13,500 வழங்கப்படும் என கடந்த வாரம் அறிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில்  மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

சீர்காழி நகர செயலாளர் வினோத் ஏற்பாட்டில், மயிலாடுதுறை மாவட்ட அவைத்தலைவர் பி.வி பாரதி தலைமையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளரும், வேதாரண்யம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ் மணியன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ். பவுன்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகின்றனர்.

இதில் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com