எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஏற்றத்தில் தங்கம் விலை...ஆனால் இன்று சற்று குறைந்துள்ளது! 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.41,824 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

News image
ஏற்றத்தில் தங்கம் விலை...ஆனால் இன்று சற்று குறைந்துள்ளது! 
Updated On :5 ஜனவரி 2023, 6:17 am

DIN


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.41,824 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில வாரங்களாக  தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக டிச.12 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.40,360-க்கும், டிச.14 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.40,800 ஆக விற்பனை செய்யப்பட்டது. பின்னர், திடீரென டிச.31 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.41,040 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. பிறகு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், 2023 -ம் ஆண்டுக்கான வர்த்தகம் தொடங்கிய முதல் நாளில் இருந்து ஏற்றம் கண்டுவரும் நிலையில் (ஜன.5) இன்று சற்று குறைந்துள்ளது. 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,228 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.41,824 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.74.00 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.74,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், நகைப்பிரியர்களுக்கும் மட்டுமின்றி சாமானியர்களுக்கும் பெரும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.