நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி கோயில் திருவாதிரைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. 

News image
Updated On :6 ஜனவரி 2023, 2:33 am

DIN

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி கோயில் திருவாதிரைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

அருள்மிகு திருக்குற்றாலநாதா் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானதும், அருள்மிகு நடராசா் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை அமைந்துள்ள குற்றாலத்தில் நடராசப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்கதுமான மாா்கழி திருவாதிரைத் திருவிழா கடந்த 28 ஆம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் ஜன.1 ஆம் தேதியன்று திருத்தோ் வடம்பிடித்தலும், ஜன.4 ஆம் தேதியன்று சித்திரசபையில் பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு திரிகூடமண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது. விழா நாள்களில் காலை 9.30 மற்றும் இரவு 7 மணிக்கு மேல் நடராசப் பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

விழா நாள்களில் நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மா.கண்ணதாசன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.