சீர்காழி அருகே  சிலம்பாட்டக் கழகம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா

சீர்காழி அருகே புளிச்சகாடு கிராமத்தில் மாவீரன் சிலம்பாட்டக் கழகம் சார்பாக சமத்துவப் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
சீர்காழி அருகே  சிலம்பாட்டக் கழகம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா

சீர்காழி அருகே புளிச்சகாடு கிராமத்தில் மாவீரன் சிலம்பாட்டக் கழகம் சார்பாக சமத்துவப் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புளிச்சக்காடு கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி தினேஷ். இவர் தனது ஓய்வு நேரத்தில் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று தமிழர் மரபுக் கலையான சிலம்பாட்டத்தை மக்களுக்கு பயிற்றுவித்து வருகிறார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட கரோனா தொற்று விடுமுறையில் ஏழை எளிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்தந்த கிராமங்களுக்கே சென்று சிலம்பக் கலையை உண்மையான முறையில் இலவசமாக பயிற்றுவித்து வருகிறார்.

இந்நிலையில் மாவீரன் சிலம்பாட்ட கழகம் மற்றும் பொதுநல அறக்கட்டளை இணைந்து புளிச்சக்காடு கிராமத்தில் சமத்துவப் பொங்கல் திருவிழாவை கொண்டாடினர். சீர்காழியை சுற்றியுள்ள கீழச்சாலை, கேவரோடை, புத்தூர், கொள்ளிடம், பாதரக்குடி, முதலைமேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 300 சிலம்பாட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் கிராமவாசிகள்  கலந்து கொண்டனர்.

காலை பொங்கல் வைக்கும் வைபவத்துடன் துவங்கிய விழாவில் சிலம்பாட்டம், ஒற்றைகம்பு, இரட்டைகம்பு, புளியாட்டம், வாள்வீச்சி உள்ளிட்ட வீர விளையாட்டுகளும், ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாநில அளவில் வெற்றிபெற்ற சிலம்பாட்ட மாணவ, மாணவிகளுக்கு சீர்காழி காவல் துணை கண்காணிப்பார் லாமேக் வழங்கி பாராட்டினர். இவ்விழாவில் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டு சமத்துவப் பொங்கலிட்டு மகிழ்சியுடன் கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com