ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :9 ஜனவரி 2023, 10:11 am

DIN

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 7 முதல் 10 ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

மேலும், பொதுத்தேர்வுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் வருகிற ஜனவரி 31 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் கூறியுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 8 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜன. 4 ஆம் தேதி வெளியானது. 

பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரையில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. 

அதுபோல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | ஆளுநர் உரை: தெலங்கானா வழி! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.