சென்னை: தமிழக ஆளுநரின் உரைக்கு பேரவையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில் அவையிலிருந்து பாதியிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.
தமிழக சட்டப்பேரவை இன்று ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கியது. இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர், திராவிட மாடல், தமிழ்நாடு என்ற வார்த்தையை படிக்காமல் புறக்கணித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு என்று வார்த்தை இடம்பெற்ற ஒவ்வொரு வாசகத்தையும் ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்துவிட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்குப் பதிலாக இந்த அரசு என்று ஆர்.என். ரவி குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க | பேரவையிலேயே ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதல்வர் கண்டனம்
இதையடுத்து, அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது தவறு என்று பேரவையிலேயே முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
ஆளுநரின் உரைக்கு பேரவைக் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ஆளுநரின் செயலை முதல்வர் பேரவையிலேயே விமரிசித்துப் பேசினார். இதனால், முறையாக தேசிய கீதம் இசைத்து கூட்டம் முடிப்பதற்கு முன்னதாக பாதியிலேயே அவையிலிருந்து ஆளுநர் புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிக்க | ஆளுநர் உரை: தெலங்கானா வழி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஞானபீட விருது வென்ற வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான்.. வீரர்களுக்கு அபராதம் இல்லை!

"சார், உங்களுக்கு தெரிஞ்ச Advice எதாச்சும் சொல்லுங்க!" முதல்வருடன் Talk With Deva சுட்டிகள்!

விஜய்யை கூட்டணிக்குள் இழுக்கிறதா பாஜக? - நயினார் நாகேந்திரன் விளக்கம்
வீடியோக்கள்

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

