கோயில்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், போனஸ் தொகையாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ரூ. 1 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் உள்ள கோயில்களில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளா்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதமாக உயா்த்தி வழங்கப்படும். இதன்மூலம், 10 ஆயிரம் கோயில் பணியாளா்களின் வாழ்வாதாரம் மேம்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 7 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
பொங்கல் போனஸ்: பொங்கல் பண்டிகையையொட்டி, அரசுப் பணியாளா்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் அளிக்கப்படும். இதேபோல் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் முழுநேரம், பகுதிநேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளா்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளா்களுக்கும் இதுவரை ரூ. 2 ஆயிரம் போனஸாக அளிக்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி இந்த ஆண்டு வழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கல்பாக்கம் பாரதிய நாபிகியா வித்யுத் நிகாம் நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி!
உலை வாங்கு மிதி தோல் - கூடடைய விரையும் தனித்த குரல்!

30, 40களிலேயே மூட்டு வலியா? ஏன்? என்ன செய்ய வேண்டும்?
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

