சட்டம் - ஒழுங்கு சரியில்லையா? பழனிசாமி குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வைத்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
சட்டம் - ஒழுங்கு சரியில்லையா? பழனிசாமி குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்
சட்டம் - ஒழுங்கு சரியில்லையா? பழனிசாமி குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்

சென்னை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வைத்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நாள்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி நடைபெறுகிறது. சென்னை சாலிகிராமத்தில் நடந்த திமுக கூட்டத்தில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது என்று குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பேரவையில் எதிக்கட்சித் தலைவர் பழனிசாமி  வைத்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

அதாவது, சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் உரிய நடைமுறையை பின்பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டும். கடந்த  அதிமுக ஆட்சியின் சட்டம் - ஒழுங்கு எப்படி இருந்தது என்பது குறித்த பட்டியல் உள்ளது என்று கூறினார்.

மேலும், பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் உறுதி அளித்தார். கட்சி பாகுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுப்பது திமுக ஆட்சிதான் என்றும் கூறினார்.

முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், பிறகு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com