துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்துக்கு கூடுதல் காட்சிகளை வழங்க தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான வாரிசு, அஜித்குமார் நடிப்பில் தயாரான துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (ஜன.11) வெளியாகியுள்ளன.
டிக்கெட் விற்பனையை அதிகரிக்கவும், வசூல் வேகத்தைக் கூட்டவும் சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். இந்த காட்சிகள் அதிகாலை 4 மணி முதலே தொடங்கும்.
இந்த நிலையில் அதிகாலை 4, 5 மணிக்கு திரையிடப்படும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்றும், சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றிக்கை அனுப்பப்பட்டது.
துணிவு திரைப்படத்துக்கு நள்ளிரவில் சிறப்பு காட்சி அறிவிக்கப்பட்டிருந்தது. சிறப்பு காட்சிகளுக்காக ரசிகர்கள் முந்தியடித்துக்கொண்டு குவிந்தனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் குவிந்ததால் பொதுச்சொத்துக்களுக்கு சேதங்களும் ஏற்பட்டன.
பொங்கலையொட்டி 16ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகள் திரையிடப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் சிறப்பு காட்சிகளை ரத்து செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், 13 முதல் 16ஆம் தேதி வரையான நாட்களில் சிறப்பு காட்சிகளுக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்களுக்கான பணம் திரும்ப வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்தநிலையில் துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12, 13 மற்றும் 18ஆம் தேதிகளில் கூடுதல் காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கை ஏற்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


