காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பொங்கல்: தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக, 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :12 ஜனவரி 2023, 2:44 am

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக, 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகை கொண்டாட பெருநகரங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று காலைமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை, கோவை, திருப்பூர், சேலம் போன்ற தொழில் நகரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களுக்கு ஜன.12 முதல் 14-ஆம் தேதி வரையும், ஜன.16 முதல் 18-ஆம் தேதி வரையும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை பல்வேறு நகரங்களுக்கு வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 4,449 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

மற்ற மாவட்டங்களிலிருந்து 6,183 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னையில்..

சென்னையில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் கோயம்பேடு, மாதவரம், பூவிருந்தவல்லி, தாம்பரம், கே.கே.நகா் பேருந்து நிலையம் ஆகிய 5 பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படவுள்ளது.

இந்த பேருந்து நிலையங்களுக்கு மக்கள் எளிதில் செல்லும் வகையில் 24 மணிநேரமும் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பேருந்துகளின் இயக்கம் மற்றும் இயக்கம் குறித்த புகாா்களை 94450 14450, 94450 14436 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.