காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பொங்கல் திருநாள்: சேலத்தில் தயாராகும் ரேக்ளா வண்டிகள்!

பொங்கல் திருநாளையொட்டி போட்டிகளுக்காக சேலத்தில் ரேக்ளா வண்டிகள் தயாராகி வருகின்றன.

News image
Updated On :13 ஜனவரி 2023, 8:35 am

DIN

சேலம்: பொங்கல் திருநாளையொட்டி போட்டிகளுக்காக சேலத்தில் ரேக்ளா வண்டிகள் தயாராகி வருகின்றன.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான காளை மாடு மற்றும் குதிரை பந்தயம் என்னும் ரேஸ் போட்டிகள் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

திருச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் இந்த போட்டிகள் நடத்தப்படும்.

Story image

அதேபோல் கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களில் குதிரைகள் பூட்டிய ரேக்ளா பந்தயங்களை நடத்துகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் காளைகள் மற்றும் குதிரைகளை தயார் செய்துவைத்துக்கொண்டும் பழைய வண்டிகளை புதுப்பித்தும் பொங்கல் பண்டிகை முடித்ததும், அடுத்தடுத்த நாட்களில் இத்தகைய ரேக்ளா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Story image

அந்தவகையில் தமிழகத்தில் ரேக்ளா வண்டிகள் தயாரிப்பில், சேலம் நெத்தி மேட்டில் உள்ள பட்டறை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த பட்டறையில் இருந்து நவீன மற்றும் அதி வேகமாக செல்லும் வகையிலான ரேக்ளா வண்டிகளை, ஜெகதீசன் மற்றும் அவரது மகன் சிவக்குமார் தயாரித்து கொடுக்கின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் வந்து, ரேக்ளா வண்டிகளை ஆர்டர் கொடுத்து செய்து வாங்கிச் செல்கின்றனர்.

Story image

2 காளை மாடுகள், ஒரு காளை மாடு பூட்டப்படும் வகையிலான ரேக்ளா வண்டிகளும், குதிரை பூட்டப்படும் ரேக்ளா வண்டிகளும் தயாரித்து வழங்கப்படுகின்றன.

நடப்பாண்டில் திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவண்ணாமலை, சென்னை, வேலூர் பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்டோர் வந்து புதிய ரேக்ளா வண்டிகளை வாங்கிச் சென்றுள்ளனர்.

Story image

தேக்கு மற்றும் கருவேல மரத்தில் ஒருவர், இருவர், 4 பேர் அமரும் வகையிலான ரேக்ளா வண்டிகளையும் தயாரித்துக் கொடுத்துள்ளனர். இந்த வண்டிகள் அனைத்தும், வரும் பொங்கல் பண்டிகையையொட்டி நடக்கும் பந்தயங்களில் களம் காண்கின்றன. 

Story image

இதுபற்றி ரேக்ளா வண்டி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிவக்குமார் கூறுகையில், 'தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், எங்களதுபட்டறையில் தலைமுறை, தலைமுறையாக ரேக்ளா வண்டிகளை தயாரித்து விற்று வருகிறோம். மிகவும் தரமாக தயாரித்து வழங்குவதால், தொடர்ந்து இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் செல்கின்றனர். நடப்பாண்டும் அதிகளவு ஆர்டர்கள் வந்து, வண்டி விற்பனை செய்துள்ளளோம். நவீன காலமாக மாறி வந்தாலும் நமது பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ரேக்ளாவை, இளைஞர்கள் இன்னும் விரும்புவதால், இத்தகைய போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு வண்டிகளை தயாரித்து வழங்குகிறோம். கர்நாடகத்தில் இருந்தும் நடப்பாண்டு ஆர்டர் பெற்று வண்டிகள் தயாரித்து கொடுத்துள்ளோம்' என்றார்.

Story image

சேலம் மாவட்டத்திற்கு என பல்வேறு பெருமைக்குரிய தொழில்கள் இருந்தாலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போட்டிகளுக்காக  தயாராகும் ரேக்ளா வண்டிகள் சேலத்திற்கு கூடுதல் பெருமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.