கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

மீண்டும் 42 ஆயிரத்தைத் தொட்ட தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று மீண்டும் 42 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. 

News image

மீண்டும் 42 ஆயிரத்தைத் தொட்ட தங்கம் விலை!

Updated On :13 ஜனவரி 2023, 6:27 am

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று மீண்டும் 42 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.

டிச.31ஆம் தேதி ஒரு சவரன் ரூ.41,040 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி 9-ம் தேதி 42 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், இன்று மீண்டும் 42 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. 

இந்நிலையில், ஜன.13ஆம் தேதியான இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,250 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.74.00 ஆகவும், ஒரு கிலோ ரூ.74,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.