காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கொங்கணாபுரம் வாரச்சந்தையில் 5,000-க்கும் மேல் ஆடு, கோழி, சேவல் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வாரச்சந்தையில் 5,000-க்கும் மேற்பட்ட ஆடு, கோழி, சேவல் விற்பனையாகின.

News image
கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ஆடு விற்பனை
Updated On :14 ஜனவரி 2023, 9:15 am

DIN

சேலம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வாரச்சந்தையில் 5,000-க்கும் மேற்பட்ட ஆடு, கோழி, சேவல் விற்பனையாகின. 

தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் சனிக்கிழமை வாரச்சந்தைக்கு சேலம், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆயிரக்கணக்கான ஆடு, கோழி, சேவல்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

பண்டிகை நாட்கள் என்பதால் கர்நாடகம், கேரளம் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்து ஆடு, கோழிகளை வாங்கிச் சென்றனர். பண்டிகை நாட்கள் என்பதால் 5,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக இருந்தன. மற்ற நாட்களைவிட இந்த வாரச் சந்தையில் இரு மடங்கு கூடுதலாக விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.