உறுதிமொழியுடன் தொடங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உறுதிமொழியுடன் தொடங்கியது. 
உறுதிமொழியுடன் தொடங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!


மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உறுதிமொழியுடன் தொடங்கியது. 

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை(ஜன.15) காலை 8 மணியளவில் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு அமைச்சர் மூர்த்தி, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் கலோன் ஆகியோர் வருகை தந்தனர். 

மாடுபிடி வீரர்கள் மஞ்சள் ஊதா, ஆரஞ்சு, பச்சை, பிஸ்கட், ரோஸ் உள்ளிட்ட வண்ணங்களில் ஆடைகள் வழங்கப்பட்டுள்ளது. 

பின்னர், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமையில் உறுதிமொழியேற்பு நடைபெற்று முதல் சுற்று மாடுபிடி வீரர்கள் களத்திற்கு வந்துள்ளனர். 

முதல் சுற்றில் 25 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்றில் பங்கேற்கும் வீர்ரகள் மஞ்சள் டி-சர்ட் அணிந்து களம் இறங்கியுள்ளனர். 

300 மாடு பிடி வீரர்கள், 800 காளைகளுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. 

முதல் காளையாக வெளிவந்த விக்ரம் பிடிப்பட்டது. 

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரருக்ககு கார் மற்றும் பசு மாடும், இரண்டாவது வீரர் மற்றும் காளைக்கு இரு சக்கர வாகனமும் பரிசாக வழங்கப்படுகிறது. 

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் அமைச்சர் மூர்த்தி சார்பில் தங்ககாசு வழங்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com