அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4வது சுற்று முடிவில் 12 காளைகளை பிடித்து அபி சித்தர் முதலிடம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கப்ட்டு போட்டியில் 4 ஆம் சுற்று முடிவில் 12 காளைகளை பிடித்து மாடுபிடி வீரர் அபி சித்தர் முதலிடம் பிடித்துள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4வது சுற்று முடிவில் 12 காளைகளை பிடித்து அபி சித்தர் முதலிடம்!


அலங்காநல்லூர் ஜல்லிக்கப்ட்டு போட்டியில் 4 ஆம் சுற்று முடிவில் 12 காளைகளை பிடித்து மாடுபிடி வீரர் அபி சித்தர் முதலிடம் பிடித்துள்ளார்.

மதுரை, அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜன.15) ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பாலமேடு ஜல்லிக்கட்டு திங்கள்கிழமை நடைபெற்றது. 

இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டி செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர்  உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் வாடிவாசல் அருகே உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். 

இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

ஜல்லிகட்டில் கலந்து கொள்ள 1000 காளைகளும், 345 மாடுபிடி வீரா்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவா்கள், ஒரு சுற்றுக்கு 25 போ் வீதம் களத்தில் மாடுபிடிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். 

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கப்ட்டு போட்டியில் 4 ஆம் சுற்று முடிவில் 12 காளைகளை பிடித்து மாடுபிடி வீரர் அபி சித்தர் முதலிடம் பிடித்துள்ளார்.

9 காளை பிடித்து அஜய் இரண்டாவது இடத்திலும், கோபாலகிருஷ்ணன் மற்றும் ரஞ்சித் தலா 7 காளைகளை பிடித்து மூன்றாவது இடத்தில் உள்ளனர். 

15 பேர் காயம்
காளைகளை அடக்க முயன்ற வீரா்கள் 8 போ், காளைகளின் உரிமையாளா்கள் 6 போ், பாா்வையாளா்கள் 1 போ் ஆகியோா் பலத்த காயமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com