தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வாழப்பாடி பகுதியில் காணும் பொங்கல் விழா கொண்டாட்டம்!

வாழப்பாடி பகுதியில் காணும் பொங்கல் விழாவை கிராமப்புற மக்கள்  கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

News image
இடையப்பட்டியில், எருதாட்டத்திற்கு காளையை ஊர்வலமாக அழைத்துச் சென்ற இளைஞர்கள்.
Updated On :17 ஜனவரி 2023, 8:09 am

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் காணும் பொங்கல் விழாவை கிராமப்புற மக்கள்  கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

வாழப்பாடி பகுதியில் காணும் பொங்கலன்று, கிராமத்தின் மையத்திலுள்ள கோயில் மைதானத்தில் கூடும் மக்கள், பாரம்பரிய கலைகளான தாரை, தப்பட்டை, உறுமி மேளம் வாசித்தும்,  ஆண்கள், பெண்கள் குழந்தைகளென அனைவரும் ஆடிப்பாடியும், மாலை நேரத்தில் காளைகளை கயிற்றில் பூட்டி, உரி என குறிப்பிடப்படும் பூத தோற்றத்தில் அலங்கரிக்கப்பட்ட கட்டை வண்டியைக் காண்பித்து, காளைகளை உற்சாகப்படுத்தும் எருதாட்டம் நடத்தியும் காணும் பொங்கல் விழாவைக் கொண்டாடி பொழுதுபோக்கி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

<strong>ஊர்வலம் சென்ற ஜல்லிக்கட்டு காளை</strong>

<strong>ஊர்வலம் சென்ற ஜல்லிக்கட்டு காளை</strong>

வாழப்பாடி பகுதியில் செவ்வாய்க்கிழமை கிராமங்கள்தோறு காணும் பொங்கல் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி, வில்வனூர், செக்கடிப்பட்டி, பொன்னாரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் எருதுகள், ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரித்த விவசாயிகள், மேள வாத்தியங்கள் முழங்க ஆரவாரத்தோடு கோயில் மைதானத்திற்கு அழைத்துச் சென்றனர். 

<strong>எருதாட்டம் நடத்தி மகிழ்ந்த சிறுவர்கள்</strong>

<strong>எருதாட்டம் நடத்தி மகிழ்ந்த சிறுவர்கள்</strong>

இளைஞர்கள் காளைகளை கயிற்றில் கட்டி,  உரி வண்டியை காண்பித்து எருதாட்டம் நடத்தி, குழந்தைகள், பெண்கள் உள்பட கூடியிருந்த மக்களை மகிழ்வித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.