வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஈரோடு கிழக்கு தேர்தல் பணிகளுக்காக பாஜக சார்பில் குழு

ஈரோடு கிழக்கு தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டது.

News image
அண்ணாமலை
Updated On :18 ஜனவரி 2023, 2:48 pm

DIN

ஈரோடு கிழக்கு தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டது.

வேதானந்தம், சரஸ்வதி, என்.பி.பழனிசாமி உள்ளிட்ட 14 பேர் அடங்கிய குழுவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.

இத்தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தலைவர்களின் படம் மற்றும் பெயர்கள் மறைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.